மாணவிகளின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க பரிந்துரை!

வேலூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப் பரிந்துரை
செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் மாணவிகளின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து பேசிய அவர், “முதல்கட்ட விசாரணையில் இரண்டு ஆசிரியைகள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எஃப்.ஆர்.ஐ. பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், முதலமைச்சரின் நிதியுதவிக்காகப் பரிந்துரை செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை (நவம்பர் 27) மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது என மாவட்டக் கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...