வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதால்
தமிழகத்தில் இன்றும் (நவம்பர் 07) மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகக் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாகச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், இன்றும் தமிழகத்தில் மழை பெய்யும். குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இன்று மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். நாளை (நவம்பர் 08) முதல் படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று (நவம்பர் 06) வரை வடகிழக்குக் பருவமழை 22 செ.மீ பெய்துள்ளது. இது இயல்பைவிட 2 சதவீதம் குறைவு. எனினும், நாகை மாவட்டத்தில் மட்டும் வழக்கத்தைவிடக் கிட்டத்தட்ட இரு மடங்கு (98 %) அதிகமாக மழை பெய்துள்ளது. 5ஆம் தேதி காலை வரையில் நாகை மாவட்டத்தில் சராசரியாக 50.9 செ.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் நெல் வயல்கள் முழுவதும் தண்ணீர் நிரம்பி ஏரி, குளம் போன்று காட்சியளிக்கின்றன.