அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவருக்கு முன்னுரிமை இல்லை: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவருக்கு
முன்னுரிமை ஏதும் அளிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட விளக்கம்: வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது. இப்போது இந்த விதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்துக்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது.
அனைவரும் பொதுப் பிரிவினர்: வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப் பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழகத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்போ, மாற்றமோ ஏற்படாது. தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிற மாநிலங்களிலும் இந்த விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் 66 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் 11 பேர் மட்டுமே பிற மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...