கந்து வட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து உயிரிழந்ததையடுத்து ஆட்சியர் மீது
நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்து வட்டிக் கொடுமை காரணமாக இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி ஏற்கனவே தலைமைச் செயலாளருக்கும் ஆட்சியருக்கும் காவல் துறையினருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதில், “இசக்கிமுத்து குடும்பத்தினர் உயிரிழந்ததற்கு முழுக் காரணம், சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததே ஆகும். எனவே அலட்சியப் போக்காக செயல்பட்ட காவல்துறை மற்றும் நிர்வாகத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தலைமைச் செயலாளர், தென்மண்டல காவல்துறை தலைவர் ஆகியோரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே ஒரு குடும்பமே உயிரிழந்ததற்குக் காரணமான ஆட்சியர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் ஊதியத்தைப் பிடித்தம்செய்து இசக்கிமுத்துவின் உறவினர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (நவம்பர் 6) நீதிபதி வேணுகோபால், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை ஆட்சியர், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக டிசம்பர் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் மற்றும் தென் மண்டலக் காவல் துறை ஐ.ஜிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்