பிஎட் படிப்புக்கு அவகாசம்!!!

தொலைதூர பிஎட் படிப்புக்கு நவம்பர் 30ஆம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை நேற்று (நவம்பர் 5) அறிவித்துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் எஸ். விஜயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2018-ஆம் ஆண்டு பிஎட் (பொது), பிஎட் (சிறப்புகல்வி) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிஎட் (பொது) படிப்பில் ஆசிரியர் பட்டயப் படிப்புடன் இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். தற்போது ஆசிரியராகப் பணிபுரிந்து வர வேண்டும். பிஎட் (சிறப்பு கல்வி) படிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் விதிமுறைகளின்படி தகுதி பெற்றிருக்க வேண்டும்.மேற்கண்ட இரு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க நவம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விளக்கக் கையேட்டை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களை 044-24306600, 24306617 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆராய்ச்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை அக்டோபர் 26 ஆம் தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, பொருளாதாரம், திரைப்படம் மற்றும் நாடகம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், சமூக அறிவியல், ஊடகவியல், புவியியல், அரசியல் அறிவியல், குற்றவியல், குற்றம் சார் நீதி நிர்வாகம், கணினி அறிவியல், வரலாறு, சுற்றுலா மற்றும் தொல்பொருள் ஆகிய பாடங்களில், ஆராய்ச்சி படிப்பில் சேரலாம் என்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்கான இளநிலை ஆராய்ச்சி தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்களும் இந்த ஆராய்ச்சி படிப்புகளில் சேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...