இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி!!!

உலகின் சக்தி வாய்ந்த பெண்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில்
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சர் 32ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இவர் முதலிடத்தைத் தனதாக்கியுள்ளார். பிரியங்கா சோப்ராவுக்கும் இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

ஃபோர்ப்ஸ் ஊடகம் 2017ஆம் ஆண்டுக்கான உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 63 வயதுடைய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பிரதமரான தெரசா மே (61) இரண்டாமிடத்திலும், பில் கேட்ஸின் மனைவியும் அமெரிக்காவைச் சேர்ந்த 53 வயதுடைய அறப்பணியாளருமான மெலிண்டா கேட்ஸ் மூன்றாமிடத்திலும் உள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயலதிகாரியான சாந்தா கோச்சர் (55) இப்பட்டியலில் 32ஆம் இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்து பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றிவரும் இந்திரா நூயி (62) பட்டியலில் 11ஆவது இடத்தில் இருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் ஹெ.சி.எல். நிறுவனருமான ஷிவ் நாடாரின் மகளும் ஹெச்.சி.எல். நிறுவனச் செயலதிகாரியுமான ரோஷினி நாடார் (36) சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் 57ஆவது இடத்தில் இருக்கிறார். மருந்துத் துறையில் சுயமாக நிறுவனம் தொடங்கி நடத்தி வரும் கிரண் மசூம்தார் ஷா (64) பட்டியலில் 71ஆவது இடத்தில் உள்ளார். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும் முன்னாள் உலகழகியுமான பிரியங்கா சோப்ராவுக்கு இப்பட்டியலில் 97ஆவது இடம் கிடைத்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...