இடது கையை இழந்த பள்ளி மாணவி! மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் விபரீதம்!!!

சேலம்:மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், ஒன்பதாம் வகுப்பு மாணவியின்
எதிர்காலமே, கேள்விக்குறியாகி உள்ளது.

சேலம் மாவட்டம், தலைவாசல், சித்தேரியைச் சேர்ந்தவர் செல்லமுத்து, 35; கூலித்தொழிலாளி. இவருக்கு, 32 வயதில் மனைவி, சவுந்தர்யா, 14, என்ற மகள், 12 வயதில் மகன் உள்ளனர். சித்தேரி அரசு பள்ளியில், சவுந்தர்யா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.இவர்களது வீடு அருகே, இரு மின் கம்பங்களுக்கு இடையே, 80 மீட்டருக்கும் அதிகமான இடைவெளி உள்ளது.

இதனால், கம்பி இறுக்கம் தளர்ந்து, தொங்கியபடி இருந்தது. சில மாதங்களுக்கு முன், பலத்த காற்றுடன் பெய்த மழையில், அங்குள்ள மரக்கிளை முறிந்து, மின் கம்பம் மீது விழுந்தது. அப்போது, மின்வாரிய அதிகாரிகள், கிளைகளை அப்புறப்படுத்தி, கம்பிகளை சரி செய்யாமல் சென்றனர்.ஆக., 4 அதிகாலை, பல் துலக்க, சவுந்தர்யா மாடிக்கு சென்றார். அப்போது, பலத்த காற்றில் ஆடிய மின் கம்பிகள், திடீரென அவர் மேல் உரசியதில், உடலில் தீப்பிடித்தது. அலறல் கேட்டு, அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவியின் இடதுகை, இரு கால்களில் படுகாயம் ஏற்பட்டது. ஆக., 8ல், அறுவை சிகிச்சை மூலம் இடது கை முழுவதும் அகற்றப்பட்டது. 40 நாட்களுக்கும் மேலாக, தொடர் சிகிச்சையில் இருந்த அவர், அக்டோபர் முதல் வாரம் வீடு திரும்பினார்.இவ்வளவும் நடந்த பின், 15 நாட்களுக்கு முன், மின்வாரிய அதிகாரிகள், செல்லமுத்து வீடு அருகே, புது மின் கம்பத்தை நட்டு, தொங்கிய கம்பிகளை இழுத்து கட்டினர். இது குறித்து, பல ஆண்டுகளாக, மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.

மாணவியின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில், நடவடிக்கை எடுத்துள்ளனர்.சவுந்தர்யாவின் தாய் புஷ்பா கூறியதாவது:இடதுகை அகற்றப்பட்டுள்ளதால், தன் சொந்த வேலையை கூட செய்ய முடியாமல், என் மகள் தவிக்கிறார். கால்களில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர். தற்போது, அவள் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது.
கூலி வேலை செய்யும் எங்களால், அவளுக்கு மருத்துவம் கூட செய்ய முடியாமல் தவிக்கிறோம்.

மகளின் பாதிப்புக்கு நிவாரணம் கோரி, கலெக்டரிடம், என் கணவர் மனு அளித்துள்ளார். அலட்சியத்துடன் செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, என் மகளுக்கு, உரிய மருத்துவம், கல்வி வசதி அளித்து, அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...