மருத்துவத் தகுதித் தேர்வு: அதிக மதிப்பெண் பெற்ற ரோபோ!!!

சீனாவில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான தகுதித் தேர்வில் மனிதர்களுடன் கலந்துகொண்ட
ரோபோ அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் மருத்துவர்களுக்கான தகுதித் தேர்வு நடந்தது. அதில் 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். அவர்களுடன் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிளை டெக் மற்றும் டிசின்டுவா பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய ஒரு ரோபோவும் தேர்வு எழுதியது.

நேற்று (நவம்பர் 7) தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில் தேர்வு எழுதியவர்கள் அதிகபட்சமாக 360 மதிப்பெண் பெற்றிருந்தனர். ஆனால், ரோபோ அவர்களைவிட அதிகமாக 450 மதிப்பெண் பெற்றுள்ளது.

தேர்வு எழுதியவர்களுக்கு இணைய வசதி வழங்கப்பட்டது. ஆனால், ரோபோ எந்தவித உதவியுமின்றி தேர்வு எழுதியுள்ளது. இது, மருத்துவமனையில் நோயாளிகளின் உடல்நிலையைப் பரிசோதித்து மருத்துவர்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட ரோபோவாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...