சென்னை பல்கலையில் தொலைதூர கல்விக்கு அவகாசம்!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் சேர்வதற்கான
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என நேற்று (நவம்பர் 5) அறிவிக்கப்பட்டது.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து வேலைநாட்களிலும் இயங்கும் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் செயல்படும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் மூலம் மாணவர்கள் சேரலாம். www.ideunom.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தைப் பயன்படுத்தியும் தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...