வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கான

வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. மேலும், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் இவ்வங்கி குறைத்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வியாழக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்டுள்ள அறிவிப்பில் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 8.30 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. இதற்கு முன்னர் வட்டி விகிதம் 8.35 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விகிதமானது வங்கித் துறையில் தற்போது நடைமுறையில் இருக்கும் குறைந்தபட்ச வீட்டுக் கடன் வட்டி விகிதமாகும். அதேபோல, வாகனக் கடன் மீதான வட்டி விகிதத்தை 9.25 சதவிகிதத்திலிருந்து 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 9.20 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது.

இந்த வட்டிக் குறைப்பு நடைமுறை நவம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ. வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால் நாட்டின் இதர வங்கிகளும் வட்டி விகிதக் குறைப்பில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது. வட்டி விகிதக் குறைப்பின் வாயிலாகத் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கடன் பெறுதலை எளிதாக்கியுள்ளதாகவும் அவர்களுக்கான சேவையைத் தாங்கள் விரிவுபடுத்தியுள்ளதாகவும் எஸ்.பி.ஐ. வங்கியின் சில்லறை வங்கிப் பிரிவின் நிர்வாக இயக்குநரான பி.கே.குப்தா கூறுகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...