ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்கே நகர்
இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 24ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
உத்தரவு
தமிழக முதல்வராக இருந்த, ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிச., 5 ம் தேதி இறந்தார். அவரது மறைவால், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு, ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு, தினகரன் பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்த வழக்கில் 'டிச., 31க்குள், இடைத்தேர்தலை நடத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அறிவிப்பு
இந்நிலையில், ஆர் கே நகர் இடைத்தேர்தல் டிச., 21 ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் ஆரம்பம்: நவம்பர் 27
வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்: டிச.,4
பரிசீலனை: டிச.,5
வேட்புமனுக்களை திரும்ப பெற கிடைசி நாள்: டிச.,7
ஓட்டுப்பதிவு : டிச.,21
ஓட்டு எண்ணிக்கை: டிச.,24
இடைத்தேர்தலின் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் ஒப்புகை சீட்டுடன் கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
முன்னதாகவே
இரட்டை இலை சின்னம் முதல்வர் தலைமையிலான அதிமுகவிற்கு சொந்தம் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இன்று டில்லி செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னதாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.