FLASH NEWS: சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரத்தில் மழையால்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்றும் கன மழை பெய்து வருகிறது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழையும், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் கூறும்பொழுது, பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  வானிலை அறிவிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...