நெட்வொர்க் துறையில் 100% அந்நிய முதலீடு!


இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 100
சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் இறுதிக்கட்டப் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நிலையில் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இதில் 49 சதவிகித முதலீடுகள் மட்டுமே நேரடியாக மேற்கொள்வதற்கு அனுமதி உள்ளது. எஞ்சிய முதலீடுகளுக்கு அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். எனவே, இத்துறையில் அரசின் அனுமதி இல்லாமலேயே 100 சதவிகித முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதற்குத் தொலைத்தொடர்பு ஆணையம் ஆலோசித்து வருகிறது. மேலும், ரூ.4.5 லட்சம் கோடிக்கும் மேல் கடனில் சிக்கித் தவித்துவரும் இத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான பரிந்துரை குறித்தும் தொலைத்தொடர்பு ஆணையம் ஆலோசிக்கவுள்ளது.

முன்னதாகக் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த கூட்டம் ஒன்றில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 10 ஆண்டுகளிலிருந்து 16 ஆண்டுகளாகத் தொலைத்தொடர்பு ஆணையம் உயர்த்தியது. மேலும், தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத்துக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டதோடு, ஸ்பெக்ட்ரம் கையிருப்பு அளவை 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக உயர்த்தியது. மேலும், 5ஜி தொழில்நுட்பச் சேவை மேம்பாடு மற்றும் ஆய்வுப்பணிக்கு ஆய்வகங்கள் அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கவும் தொலைத்தொடர்பு ஆணையம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...