ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள்,
ஓய்வுபெற்ற பின், ஐந்து ஆண்டுகள் வரை, ஒப்பந்த அடிப்படையில் பணி புரியலாம்' என, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது, 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள் அல்லது அதிகாரிகளின் பணி அனுபவத்தை, மேலும் பயன்படுத்திக் கொள்ள, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அனைத்து மண்டல தலைமை அலுவலகங்களுக்கும், ரயில்வே வாரியம் அனுப்பிய உத்தரவில் கூறியிருப்பதாவது: ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்கள், முதல் கட்டமாக, ஒரு ஆண்டு வரை பணியாற்றலாம். அதன்பின், அதிகபட்சமாக, ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.