இடைத் தேர்தல்: நேரலையாக வாக்குப்பதிவு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இணையத்தில்
நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

இடைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் பிரச்சாரம் முடிவடைவதால், ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இடைத் தேர்தலுக்காகத் தேர்தல் ஆணைய இயக்குனர் விக்ரம் பத்ரா சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

வாக்குப்பதிவு முறைகேட்டைத் தடுக்கும் விதமாக திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்."ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளிலிருந்தும் வாக்குப்பதிவு நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், பணப் பட்டுவாடாவைத் தடுக்கக் கூடுதல் கண்காணிப்பு காமிராக்களைப் பொருத்த வேண்டும்" என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று (டிசம்பர் 18) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிறப்பு அதிகாரி பத்ரா வந்த நாளில் மட்டும் 100 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா நடைபெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டினை திமுக முன்வைத்தது.

இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டுக்குப் பணம் பெறுவதாக திமுக சித்தரிக்கிறது.தேர்தலை நிறுத்தும் நோக்குடன் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது என்று கூறியது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவும் வாக்கு எண்ணிக்கையும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்" என்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...