மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவப் பட்டமேற்படிப்பு
மாணவர்கள் நேற்று (நவம்பர் 30) 14ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.
சென்னை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 556 டாக்டர்கள் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு, சென்னையில் கடந்த 17, 18 தேதிகளில் நடந்தது. நேர்முகத் தேர்வில் பங்கேற்ற மருத்துவப் பட்ட மேற்படிப்பு முடித்த டாக்டர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
இந்த நேர்முகத் தேர்வை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்தாய்வை எம்ஆர்பி கலந்தாய்வுக்கு முன்பு நடத்த வேண்டும். நடந்து முடிந்த அனைத்து எம்ஆர்பி நேர்முகத் தேர்வு கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்த வேண்டும். எம்ஆர்பி மூலம் பணி அமர்த்தப்படும் டாக்டர்களைக் கட்டாய கிராமப்புறச் சேவைக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 17ஆம் தேதி முதல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 14ஆவது நாளாகத் தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டத்துடன் உண்ணாவிரதத்திலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையிலும் 5 நாட்களாக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மதுரை அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (டிசம்பர் 1) ஐந்தாவது நாளாகத் தொடர்ந்துவருகின்றனர். 69% இட ஒதுக்கீடு முறையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் போராடிவருகின்றனர்.
நேற்று மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் வரையில் கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்று மீண்டும் மருத்துவமனை வந்தடைந்தனர். இன்று மருத்துவமனை முன் மனித சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவப் பணியில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனியார் மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முறைகேடாக நடந்த மருத்துவர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் முறைகேடாக நடத்தப்பட்ட நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பினர்.கோரிக்கை நிறைவேறும் வகையில் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.