மொபைல் டேட்டா: இந்தியா முதலிடம்!

சர்வதேச அளவில் அதிக மொபைல்
டேட்டா பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காண்ட் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலின்படி, “மாதம் 150 கோடி ஜிபி டேட்டா பயன்படுத்தி, அதிகளவு மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் சீனாவை ஒன்றிணைத்தாலும், இந்திய மொபைல் டேட்டா பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக ஊக்லா வெளியிட்ட தகவல்களின்படி அதிவேக பிராட்பேண்ட் வேகம் வழங்கும் நாடுகளில் சர்வதேச சந்தையில் இந்தியா நேபாளம் மற்றும் இலங்கையைத் தொடர்ந்து 109ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் சராசரியாக நொடிக்கு 7.65 எம்.பியாக இருந்தது. எனினும் ஆண்டு இறுதியான நவம்பர் மாத நிலவரப்படி டவுன்லோடு வேகம் நொடிக்கு 8.80 எம்.பியாக அதிகரித்துள்ளது. இது 15% உயர்வு என ஊக்லா வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் டேட்டா வேகத்தைத் தொடர்ந்து, பிராட்பேண்ட் வேகமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நொடிக்கு 12.12 எம்.பியாகப் பதிவாகியிருந்தது, நவம்பர் மாத நிலவரப்படி நொடிக்கு 18.82 எம்.பியாக அதிகரித்துள்ளது. நவம்பர் மாத நிலவரப்படி மொபைல் டேட்டா வேகம் வழங்கும் நாடுகளில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...