நீதிபதிகள் சம்பள உயர்வு: பார்லி.,யில் மசோதா தாக்கல்!!!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின்
சம்பளத்தை உயர்த்தும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

'உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கிடையே, ஏழாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்தது. இதையடுத்து, நீதிபதிகள் சம்பளத்தை உயர்த்தும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, தற்போது, ஒரு லட்சம் ரூபாயாக உள்ள, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் மாத சம்பளம், 2.80 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் மாத சம்பளம், 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம், 80 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.25 லட்சம் ரூபாயாக உயரும். 2016 ஜன., 1ல் இருந்து, திருத்தப்பட்ட சம்பளம் வழங்கப்பட உள்ளது.உச்ச நீதிமன்றத்துக்கு, 31 நீதிபதி பணியிடங்கள், உயர் நீதிமன்றங்களுக்கு, 1,079 நீதிபதி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த மசோதா, நேற்று லோக்சபாவில் அறிமுகம் செய்த போது, ராஜ்யசபாவில் இருந்த சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் வருவதற்கு தாமதம் ஆனது; இதை, லோக்சபா சபாநாயகர், சுமித்ரா மகாஜன் கண்டித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...