தாமதாக ஊதியம் வழங்குவதை கண்டித்து போராட்டம்!!

*ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதை கண்டித்து பூவிருந்தவல்லியில்
துப்புறவு தொழிலாளர்கள் போராட்டம்*
                                                                                                                          சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் ஊதியம் காலதாமதமாக வழங்கப்படுவதை கண்டித்து துப்புறவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பூவிருந்தவல்லி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 42 அரசு நிரந்தர துப்புறவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் கடந்த 5 மாதமாக தாமதமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

புத்தாண்டை ஒட்டி முன்கூட்டியே ஊதியத்தை வழங்க வேண்டும் என அரசு அறிவித்தும் பணியாளர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி பணியை புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதியத்தொகை இல்லாமல் தங்களால் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லை என பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக ஊதிய தொகையை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...