ஆந்திரா- ஒடிசா கடற்கரை இடையே புயல் சின்னம்
வலுவிழந்துள்ளதால் நாளை(டிசம்பர் 09) கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த தாழ்வு பகுதி நேற்று (டிசம்பர் 07) காற்றழுத்த மண்டலமாக மாறியது.
இது புயல் சின்னமாக மாறி தீவிரம் அடைந்து வடதமிழகத்தைத் தாக்கும் என்றும் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காற்றழுத்த மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் வடதமிழகத்துக்குப் புயல் ஆபத்து நீங்கியது.
நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகத் தீவிரம் அடைந்து வடக்கு ஆந்திரா-ஒடிசா பகுதியை நோக்கி நகர்ந்தது. வடக்கு ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென் கிழக்கே 800 கி.மீ. தொலை விலும், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இதனால் நாளை (டிசம்பர் 09) காலை வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரை இடையே புயல் சின்னம் வலு இழந்த நிலையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திர கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடல் பகுதியில் கொந்தளிப்பு காணப்படும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வாரத்திலிருந்து புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்கு செல்லாததால் வருவாய் இழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் மழையின் காரணமாக நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாள்களாக இந்த அணையில் குளிக்க விதிக்கப்பட்ட தடை, இன்று 9-வது நாளாகத் தொடர்கிறது.