பல்கலை ஊழியர்களுக்கு பிப்., முதல் சம்பள உயர்வு!!!

சென்னை: சென்னை பல்கலை ஊழியர்களுக்கு, பிப்ரவரி முதல், ஏழாவது
ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க, சிண்டிகேட் கூட்டத்தில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையின் சிண்டிகேட் கூட்டம் நடந்தது. இதில், பல்கலை ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, பிப்ரவரி முதல், ஊதிய உயர்வு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. பல்கலையில் பணியாற்றும் உதவியாளர்களுக்கு, இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பதவி உயர்வை வழங்க, கமிட்டி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.மேலும், பல்கலை இணைப்பில் உள்ள அரசு உதவி பெறும், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி முதல்வராக தேர்வானவர், பிஎச்.டி., படித்ததில் முறைகேடு செய்துள்ளதாக எழுந்த புகார் குறித்தும், சிண்டிகேட்டில் அறிக்கை தாக்கலானது. இதன்படி, முதல்வரின் நியமனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...