மூத்த வழக்கறிஞர்களை எச்சரித்த தலைமை நீதிபதி!

வழக்கு விசாரணையின்போது சில மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதிகள் முன்பாகக்
குரலை உயர்த்தி ஆவேசத்துடன் வாதிடுகின்றனர் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேதனை தெரிவித்துள்ளார்.

அயோத்தி நிலம் மற்றும் டில்லி முதல்வர் – துணைநிலை ஆளுநர் இடையேயான அதிகாரப் பகிர்வு தொடர்பான விசாரணைகள் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்தன. இது தொடர்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதியை நோக்கிக் குரலை உயர்த்தியும் ஆவேசத்துடனும் வாதிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலுக்கு தீபக் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சில மூத்த வழக்கறிஞர்கள் வழக்கில் வெற்றி பெற வேண்டும், தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு நீதிபதி முன்பாக மிரட்டல் தொனியில் குரலை உயர்த்தி ஆவேசத்துடன் கூச்சலிடுகின்றனர்” என்று வழக்கு விசாரணை ஒன்றின்போது குறிப்பிட்ட தீபக் மிஸ்ரா, இது போன்ற செயல்பாடுகளைச் சகித்துக்கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளார்.

இப்படி ஆவேசப்படுவது அவர்கள் திறமையற்றவர்கள், மூத்த வழக்கறிஞர்களுக்கான தகுதியில்லாதவர்கள் என்பதைத்தான் காட்டுகிறது. மூத்த வழக்கறிஞர்கள் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு மொழிக்கு எதிராக இவர்கள் வாதிடுவதை எத்தனை நாட்கள்தான் பொறுத்துக்கொள்ள முடியும் என்று கேள்வியெழுப்பிய அவர், “இவர்களை உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...