போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 4-வது நாளாக நீட்டிப்பதால்
தமிழக அரசுக்கு ரூ.120 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளதால் அண்ணா தொழிற்சங்கம் உள்பட அரசு ஆதரவு தொழிற்சங்க தொழிலாளர்களை வைத்து தற்காலி பணியாளர்களை வைத்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆனாலும் சென்னை மாநகர பஸ்களில் கூட்டம் அதிகம் இல்லை. பஸ்சை நம்பி பலமணி நேரம் காத்திருந்தவர்கள் ஆட்டோ, இரு சக்கர வாகனத்தில் சென்று வருகிறார்கள்.
இதனால் பஸ் நிறுத்தங்களில் கூட்டம் இல்லை. ஏராளமான பேர் மின்சார ரெயில், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
மாநகர போக்குவரத்து கழகம் பஸ்களை இயக்கினாலும் அதில் போதிய பயணிகள் இல்லாததால் வருமானம் குறைந்து விட்டது.
சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தனியார் பஸ்கள் இயங்குவதால் அரசு பஸ்களில் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் பாதிக்கு குறைவாகவே இயக்கப்படுவதால் அதிலும் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக பஸ்கள் ஓடாததால் 65 சதவீத அளவுக்கு ரூ.120 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.20 கோடி முதல் ரூ.22 கோடி வரை வருவாய் கிடைத்து வந்தது. தற்போது வசூல் ரூ.7 கோடியாக குறைந்து விட்டது. மதுரை, கும்பகோணம், கோவை, விழுப்புரம் மண்டலங்களில் நாள் ஒன்றுக்கு வருவாய் 1 கோடிக்கும் குறைவாக சென்றுவிட்டது.
சென்னையில் 34 மாநகர போக்குவரத்து கழக டெப்போக்கள் உள்ளது. இதன் மூலம் 3,790 பஸ்களும், 200 மினி பஸ்களும், இயக்கப்பட்டு வந்தன. 24,000 பணியாளர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1,642 வழித்தடங்களில் 52,000 டிரிப்கள் சென்று ரூ.2.3 கோடி வருவாய் ஈட்டி வந்தது.
தற்போது ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் வருவாய் ரூ.80 லட்சமாக குறைந்துவிட்டது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள் வருவாய் இழப்பு காரணமாக மேலும் வீழ்ச்சியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் சண்முகம் கூறியதாவது:-
போக்குவரத்து கழக ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாத இந்த அரசு போராட்டத்தை ஒடுக்குவது எப்படி என்று தான் யோசிக்கிறது.
போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணப் பலனை கொடுக்காமல் அரசு ஏமாற்றுகிறது.
இதை கேட்டால் எங்கள் மீது அரசு வழக்கு போடுகிறது. வாழ்நாள் முழுவதும் வேலை பார்க்கும் தொழிலாளிக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது எந்த வகையில் நியாயம்? அதனால்தான் தொழிலாளர்கள் போராடுகிறார்கள்.
ஆனால் எங்களது போராட்டத்தை ஒடுக்குவதற்காக தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்குவதாக அரசு கூறினாலும் முழுமையாக பஸ்களை அவர்களால் இயக்க முடியவில்லை. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து கழகங்கள் மூலம் தினமும் ரூ.30 கோடிக்கு மேல் வருமானம் வரும். ஆனால் இந்த 4 நாட்களில் பெயரளவுக்கு தான் பஸ்கள் இயக்கப்படுவதால் வருமானத்தை விட டீசல் செலவுதான் அதிகமாக இருக்கும். இந்த 4 நாட்களில் மட்டும் ரூ.120 கோடிவரை போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இன்னொரு கோணத்தில் பார்த்தால், பெரும்பாலான பஸ்கள் 4 நாளாக இயக்காததால் டீசல் செலவு மிச்சமாகி இருக்கும். தேய்மானம் மிச்சம். டிரைவர்- கண்டக்டர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. இப்படி பார்த்தால் அரசுக்கு லாபம்தான்.
தமிழ்நாடு முழுவதும் 2011-ம் ஆண்டு 22 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அதை படிப்படியாக 18 ஆயிரத்து 235 பஸ்களாக இப்போது குறைத்து விட்டனர். அதிலும் இந்த ஸ்டிரைக் காலத்தில் 12,124 பஸ்களை இயக்கியதாக ஒரு தவறான புள்ளி விவரத்தை தெரிவிக்கின்றனர். இந்த பஸ்களின் கலெக்.ஷன் என்ன என்பதை அவர்களால் சொல்ல இயலாது. அந்த அளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.
எனவே போக்குவரத்து கழகத்திற்காக உழைக்கும் ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க அரசு முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.