பட்ஜெட்டில் வருமான வரி ரத்தாகுமா???

2018-19 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை ரத்து செய்வது
தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே பாஜக கட்சியைச் சேர்ந்த பலர் தனிநபர் வருமான வரிச் செலுத்தும் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஆர்த்கிராந்தி அமைப்பின் நிறுவனரும் பொருளாதார நிபுணருமான அனில் போகில் உள்ளிட்ட பலர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதுபோன்ற சூழலில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட் (2018-19) அறிக்கையில் வருமான வரி நடைமுறையை நீக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது அனில் போகில் பரிந்துரையின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தனிநபர் வருமான வரியை ரத்து செய்வது தொடர்பான அவரது பரிந்துரை ஏற்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல, வருமான வரியை நீக்கிவிட்டு, ஒற்றை வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா கருத்துத் தெரிவித்திருந்தார். நாட்டு மக்களில் அதிகம் வசதி படைத்தவர்களே பெரும்பாலும் வருமான வரிச் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இவர்களும் வருமான வரிச் செலுத்தாமல் தவிர்ப்பதற்காகப் பல்வேறு வழிகளைக் கையிலெடுக்கின்றனர். வருமான வரியை ரத்து செய்தால் அதன் வாயிலாக அரசுக்குக் கிடைக்கும் தொகையைக் கொண்டு நிறைவேற்றப்படும் நலத்திட்ட உதவிகளில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...