வரும் ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலரது
பதவிக் காலம் முடிவடைவதனால், மார்ச் 23ஆம் தேதியன்று 58 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், 543 + 2 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதேபோல, மாநிலங்களவையிலுள்ள இடங்களின் எண்ணிக்கை 245. இதில் 233 உறுப்பினர்கள் இந்தியாவிலுள்ள மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 12 நியமன உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பார். இவர்கள் கலை, அறிவியல், சமூக சேவை, இலக்கியம் என வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகளாக இருப்பார்கள்.
நேற்று (பிப்ரவரி 23) வரை மாநிலங்களவையில் ஆறு காலியிடங்கள் உள்ளன. இதுதவிர, வரும் ஏப்ரல் மாதம் சில மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடையவுள்ளது. மத்திய அமைச்சர்கள் ரவி ஷங்கர் பிரசாத், ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் இந்த வரிசையில் இடம்பெறுகின்றனர்.
இதையடுத்து, மொத்தமுள்ள 58 மாநிலங்களவை உறுப்பினர் காலியிடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 12ஆம் தேதியோடு முடிவடைவதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 10 மாநிலங்களவை எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அந்த மாநிலத்திலுள்ள 403 சட்டமன்ற உறுப்பினர்களில் 324 பேர் பாஜக கூட்டணியில் இருக்கின்றனர். இதனால், அந்தக் கட்சியின் சார்பில் கணிசமான அளவில் எம்.பிக்கள் தேர்வாவது உறுதியாகியுள்ளது. இதேபோல பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஆறு எம்.பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சியே நடைபெறுவதால், இங்கும் பாஜகவுக்கு இடம் கிடைக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. இதேபோல மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசத்தில் தலா ஐந்து இடங்களும், குஜராத் மற்றும் கர்நாடகாவில் தலா நான்கு இடங்களும் நிரப்பப்படவுள்ளன.
மீதமுள்ள மாநிலங்களிலும் பாஜகவுக்குச் செல்வாக்கான நிலையே காணப்படுகிறது. தற்போது மாநிலங்களவையில் பாஜகவுக்கு 58 உறுப்பினர்களும் காங்கிரஸுக்கு 54 உறுப்பினர்களும் இருக்கின்றனர். இதற்கடுத்த இடங்களை சமாஜ்வாதி கட்சி, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ் போன்றவை பெறுகின்றன. மார்ச் மாதத் தேர்தலால், இந்த நிலையில் மாற்றம் உண்டாகும்.
இந்த மாநிலங்களவைத் தேர்தல் மூலமாக பாஜகவின் பலம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையோடு இருக்கும் பாஜகவுக்கு, மாநிலங்களவையில் பலமில்லாதது ஒரு பின்னடைவாகவே இருந்து வந்தது. ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், அதை மாற்றும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது பாஜக. அதுவே, இந்தத் தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பையும் பன்மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.