தென்கொரியாவின் முன்னணி
ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ், இந்தியாவில் தன்னுடைய முதல் தொழிற்சாலையை ஆந்திராவில் அமைக்கிறது. இதன் மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ’கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் புதிய ஆலை அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. 23 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட இவ்வாலையில் வருடத்திற்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த பொருட்கள் மற்றும் சேவையை வழங்குவதன் மூலம் வாகன வாழ்க்கை அனுபவத்தை ஒரு புதிய தரத்துடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்’ என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாலையில் தயாரிக்கப்படும் முதல் காரை வருகிற 2019ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில் களமிறங்குவதில் அதிக ஆர்வமாக இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் பலருக்கும் இந்நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், 1990களிலிருந்தே இந்தியாவில் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.