குரூப் 4 தேர்வில் நடந்த பெரிய முறைகேடு!- வெடிக்கும் சர்ச்சை

தமிழகத்தில் நடந்த குரூப் 4 தேர்வில் மத்தியபிரதேசம் மற்றும் அசாம்

மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர்கள் தேர்வு எழுதிய சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிகளுக்கான தேர்வினை  ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. சுமார் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு நடந்த இந்தத் தேர்வை எழுத 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் அடங்குவர். வெளிமாநிலத்தவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க அனுமதித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு வைகோ உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வு எழுதினார்கள். இதில் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில் மத்தியப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்த 5 இளைஞர்கள் பங்கேற்றனர். இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்திருந்த, தமிழ் மொழி தெரியாத இவர்கள் ஆங்கிலத்தில் தேர்வினை எழுதியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் படித்து விட்டு வேலை கிடைக்காத நிலையில் பொறியியல் பட்டதாரிகள்கூட துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அடிப்படை பணிகளுக்கான தேர்வுகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை அனுமதித்தது வேலையில்லா தமிழக இளைஞர்களையும், அவரகளது பெற்றோர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...