வேலைவாய்ப்பு: காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பணி!

திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்
கீழ் ஒப்பந்த அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மருத்துவர் அலுவலர், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், சுகாதாரப் பார்வையாளர், ஆய்வக நுட்புநர், ஆலோசகர்.

பணியிடங்கள்: 52

வயது வரம்பு: 01.07.2017இன்படி 18 முதல் 65க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02.03.2018.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்கநர் - மருத்துவப் பணிகள், (காசநோய்) மாவட்ட காசநோய் மையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம், காஞ்சிபுரம் - 631502

மேலும் விவரங்களுக்கு http://www.kanchi.nic.in/Pressrelease/application_ddhs.pdfஎன்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...