உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் புதிய செயற்கை
நுண்ணறிவு கொண்டு பயனர்களின் இருதய பிரச்சினைகளைக் கண்டறியும் கருவியை அறிமுகம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் கருவிகளைத் தயாரிக்கப் பல்வேறு நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுவருகின்றன. அதில் கூகுள் நிறுவனமும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தானியங்கி முறையில் செயல்பட்டு, பயனர்களுக்கு உதவும் கருவிகளைத் தயாரிக்கும் முயற்சியில் தற்போது கூகுள் நிறுவனம் உள்ளது. அதன்படி மனிதர்களின் கண்களை ஸ்கேன் செய்து அவர்களின் இருதயத்தில் இருக்கும் குறைபாடுகளைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
பல்வேறு பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பல தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயற்கை நுண்ணறிவு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் ரத்த அழுத்தம், வயது, அவர்கள் புகைபிடிப்பவர்களா போன்ற தகவல்களை இந்தத் தொழில்நுட்பம் கண்டறியும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களின் கண்களில் உள்ள ரெட்டினாவை ஸ்கேன் செய்து அவர்களில் இருதயப் பிரச்சினையைக் கூறும் இந்தத் தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டுவருகிறது.