அரசுப் பணியில் அயல் மாநிலத்தார் கூடாது: முதல்வருக்குக் கடிதம்!!!

தமிழ்நாடு அரசின் 9,351 பணியிடங்களுக்காக தமிழ்நாடு
அரசுப் பணிகள் தேர்வாணையம், வரும் 11.02.2018 அன்று நடத்தவுள்ள பொதுத் தேர்வில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்நாடு முதலமைச்சரின் சென்னை இல்ல அலுவலகத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இன்று (பிப்ரவரி 8) கடிதம் அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கண் சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதால், முதலமைச்சரின் தனிச் செயலாளரிடம் இந்தக் கடிதத்தை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், இயக்குநர் வ. கௌதமன் ஆகியோர் நேரில் அளித்தனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்படி, தமிழ்நாட்டு அரசுப் பணிகளுக்கு இந்தியாவின் பிற மாநிலத்தவர் மட்டுமின்றி, நேப்பாளம், பூட்டான், பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட வெளிநாட்டவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய அறிவிப்பின் அடிப்படையிலேயே வரும் 11.02.2018 தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில், தமிழர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் வலியுறுத்தல்.

கடந்த பிப்ரவரி 3 அன்று, சென்னை அண்ணா அரங்கில் நடைபெற்ற “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்க்கு அல்ல!” – சிறப்பு மாநாட்டின் தீர்மானங்களும், இந்தியாவெங்கும் அந்தந்த மாநிலங்களில் செயலில் உள்ள மண்ணின் மக்களுக்கே வேலை அளிக்கும் சட்டங்கள், ஆணைகள், தீர்மானங்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுச் சட்டம் ஆகியவற்றையும் முதலமைச்சருக்கு இந்தக் கடிதத்தோடு இணைத்துக் கொடுத்துள்ளார் பெ. மணியரசன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...