சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதை
எதிர்த்து மூன்றாவது நாளாக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
சென்னை பாரிமுனையில் ஆங்கிலேயர்களால் 1891ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவருகிறது. இது இந்தியாவின் இரண்டாவது பழமையான கல்லூரி என்ற பெருமைக்குரியது. மெட்ராஸ் சட்டக் கல்லூரி என இருந்த இக்கல்லூரி 1990ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டது.
126 ஆண்டு பழமை வாய்ந்த இந்தக் கல்லூரியில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மாணவர்களிடையே வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதாவது இக்கல்லூரியின் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பு 2 ஆகப் பிரிக்கப்பட்டு, சென்னைக்கு வெளியே காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூரிலும் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதை எதிர்த்து கடந்த 2015ஆம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் கல்லூரியை இடமாற்றம் செய்வதை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்தில் கல்லூரிக்கான கட்டடம் கட்டப்பட்டு தமிழக அரசு கல்லூரியை இடமாற்றம் செய்ய முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக இன்று (பிப்ரவரி 28) தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
அப்போது தூக்கு போட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு, திமுக மாணவர் அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எழில், மாணவர் அணியைச் சேர்ந்த கவிகணேசன் மற்றும் காசிராஜன் ஆகியோர் மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்
இதற்கிடையே சுமார் 20 சட்டக் கல்லூரி மாணவர்கள் தலைமை செயலகத்தில் சட்டத் துறை செயலாளரை சந்திக்க சென்றுள்ளனர் அப்போது 4 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்த போது சட்டதுறை செயலாளர் கோரிக்கையை நிராகரித்து, இனி எதுவும் செய்ய முடியாது என்று கூறி மாணவர்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் நாளை (பிப்ரவரி 28) பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.