மாற்றுத் திறனாளிகளுக்குக் கூடுதல் மானியம் கேட்டு வழக்கு!

மாற்றுத் திறனாளிகளுக்கு 75 சதவிகித மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கக்
கோரி தொடரப்பட்ட வழக்கை நாளை (பிப்ரவரி 21) விசாரிக்கவுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணிக்குச் செல்லும் மகளிர் பயன் பெறும் வகையில் ஸ்கூட்டர் மானியத் திட்டத்தின் கீழ் ரூ.25,000 அல்லது ஸ்கூட்டரின் விலையில் 50 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும் என்று கடந்த தேர்தலின்போது அறிவிக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதி வரை ஊராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வழங்கப்பட்டன. இதற்காகப் பெண்களிடமிருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சம் பேரை தேர்ந்தெடுத்து மானியம் வழங்கப்படவுள்ளது.

பிப்ரவரி 24ஆம் தேதி மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைக்கப் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கப் பொதுச்செயலாளர் நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், பெண்களுக்கு 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும் நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கூடுதல் மானியம், அதாவது 75 சதவிகிதம் தர வேண்டும் என்றும் 4 சதவிகித இடஒதுக்கீட்டில் 4000 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கைத் தான் விசாரிக்க முடியாது என்றும் உரிய நீதிபதி முன்பு விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்றும் நீதிமன்றப் பதிவுத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இந்த மனு நாளைக்கு விசாரணைக்கு வரவுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...