பொதுத் தேர்வு : ஷூ சாக்ஸ் அணியத் தடை!

பிகாரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்
ஷூ சாக்ஸ் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்கள் காப்பியடிப்பதாகவும், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வில், 1,000 மாணவர்கள் பிடிபட்டனர். அதேபோல், 24 போலி தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

பள்ளி தேர்வுகள் வாரிய தலைவர் ஆனந்த் கிஷோர், “பீகாரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவ்கள் இந்தத் தேர்வை மொத்தம் 17.70 லட்சம் எழுதுகின்றனர். மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க ஷு மற்றும் சாக்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது. செருப்பு மட்டுமே அணிந்து வரவேண்டும். 25 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

பீகாரில் 2016 ஆம் ஆண்டு நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் கலை பாடப்பிரிவில் மாணவி ரூபிராய் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சவுரப்குமார் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்ததால் இவர்களிடம் ஊடகங்கள் பேட்டி எடுத்தது. அப்போது இவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து 14 பேர், தேர்வில் முறைகேடு செய்ததாக கூறி அவர்களின் தேர்வை பீகார் அரசு ரத்து செய்தது.

2017ஆம் ஆண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் கலைப் பிரிவில் கனேஷ் குமார் என்பவர் 82.6 %மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அதைத் தொடர்ந்து ஊடகங்கள் அவரிடம் பேட்டி எடுத்தது. அப்போது, இசைக்கருவிகளை இசைக்கும்படி பத்திரிக்கையாளர்கள் ஆவலுடன் கேட்டனர். ஆனால் அவர் சரியாக வாசிக்காமல். மேலும் பாட்டு பாடும் படி கேட்டபோது அவர் சொதப்பினார். இதனால் அவரது தேர்ச்சியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தேர்வில் முறைகேடு செய்து முதலிடம் பிடித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மாநில பள்ளி கல்வி தேர்வு வாரியம் அவரது தேர்வை ரத்து செய்தது. அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். மேலும் அவருக்கு 42 வயது என்பது தெரியவந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...