சேலத்தில் ரவுடிக்கு, காவல் ஆய்வாளர் கேக் ஊட்டிய புகைப்படம்
வைரலானதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர், சுசீந்திரன், 33. இவர் மீது, கொள்ளை, கொலை என 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சுசீந்திரன் தனது பிறந்தநாளை சேலம் போலீஸ் குடியிருப்பில் கொண்டாடியுள்ளார். இதில் தேமுதிக பிரமுகர் சொக்கலிங்கம், கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் கருணாகரன், ஏட்டு ஏழுமலை ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கொண்டாட்டத்தின் போது ரவுடி சுசீந்திரனுக்கு காவல் ஆய்வாளர் கருணாகரன் கேக் ஊட்டியுள்ளார். இதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரவுடிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய போலீஸ் அதிகாரிக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய சேலம் காவல் ஆணையர் சங்கர், கருணாகரனை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 75 ரவுடிகளை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது இதுபோன்ற சம்பவம் நடந்தது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போராடும் மாணவர்களையும் இளைஞர்களையும். அடித்து உதைத்து கைது செய்கின்றனர். ஆனால் ரவுடிக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று முகநூலில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.