NEET தேர்வுக்கு தமிழகத்தில் 10 மையங்கள் ....வெளியீடு!!!

NEET தேர்வுக்கு தமிழகத்தில் 10 மையங்கள் ....வெளியீடு....
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவுத்தேர்வு, மே, 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு தேதி விஷயத்தில், இதோ, அதோ என இழுத்தடித்த, சி.பி.எஸ்.இ., நிர்வாகம், நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டது. தமிழகத்தில், 10 தேர்வு மையங்களின் பெயர்களும் வெளியிடப்பட்டன. 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கிய, ஒரு மணி நேரத்தில், இணையதளம் முடங்கியது.

மே6 நீட் தேர்வு, மருத்துவப் படிப்பு,  நீட் நுழைவு தேர்வு 2018,Neet entrance Exam 2018, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சி.பி.எஸ்.இ இணையதளம், ஜிப்மர் மருத்துவ கல்லுாரி, ஆன்லைன் விண்ணப்பம், எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி, NEET exam, medical entrance test, May 6 Neet exam, Medical Study,  MBBS, PDS, CBSE website, Jipmer Medical College, Online Application, AIMS Medical College


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 'எய்ம்ஸ்' மற்றும், 'ஜிப்மர்' மருத்துவ கல்லுாரிகளுக்கு மட்டும், தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான, 'நீட்' தேர்வு குறித்த அறிவிக்கையை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. மே, 6ல், 'நீட்' தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் பதிவு, http://cbseneet.nic.in என்ற, இணையதளத்தில், நேற்று காலை, 7:00 மணிக்கு பின், துவங்கியது; மார்ச், 9 நள்ளிரவு, 11:30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள், இணையதளம் முடங்கியது. பின், படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்தது. நேற்று இரவு, 7:00 மணி வரையிலான, 12 மணி நேரத்தில், 16 லட்சம் பேர் இணையதளத்தை பார்வையிட்டுள்ளனர்.

* பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 1,400 ரூபாயும், மற்ற இனத்தவர்

மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 750 ரூபாயும், தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மார்ச், 10 நள்ளிரவு, 11:30 மணிக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும்

* சுயநிதி பல்கலை, கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் ஒதுக்கீடு இடங்கள், மத்திய பல்கலைகள், கல்லுாரிகள், மத்திய ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இடங்கள் என, அனைத்திற்கும், 'நீட்' தேர்வின்படியே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும்

* ஆந்திரா, தெலுங்கானா அரசுகளின் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், 15 சதவீத இடங்கள், இந்த ஆண்டு முதல், மத்திய அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ளன; அதற்கும், 'நீட்' தேர்ச்சி அடைய வேண்டும்

* தேர்வுக்கு விண்ணப்பிக்க, 'ஆதார்' கட்டாயம் தேவை. வெளிநாடு வாழ் தமிழர்கள், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டினருக்கு, 'பாஸ்போர்ட்' எண் கட்டாயம் வேண்டும்

* பொதுப்பிரிவினர், 1993 மே, 7 முதல், 2002 ஜன., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். மற்ற பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், 1988 மே, 7 முதல், 2002 ஜன., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். அதாவது, 2018 டிசம்பருக்குள், மாணவருக்கு, 17 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்

* இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியலான, 'பயோடெக்னாலஜி' பிரிவுகளில் படித்திருக்க வேண்டும். பொது பிரிவினர், 50 சதவீதம்; மாற்றுத்திறனாளி பொது பிரிவினர், 45 சதவீதம்; மற்ற பிரிவினர், 40 சதவீதமும், பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என்.ஐ.ஓ.எஸ்., திறந்தநிலை பள்ளியில் படித்தவர்கள், தனித்தேர்வர்கள், 'நீட்' தேர்வில் பங்கேற்க முடியாது

* காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில், 180 வினாக்கள் இடம் பெறும்

* சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல், திருவள்ளூர், வேலுார் என, 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைகின்றன.

விண்ணப்பிப்பது எப்படி? அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு

'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.

தனியார் பள்ளி மாணவர்கள், தங்கள் பெற்றோரின் உதவியுடனும், பள்ளிகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்கள் உதவியுடனும், விண்ணப்ப பதிவை துவங்கியுள்ளனர். ஆனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை தெரியாமல், தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான மாணவர்கள், கிராமப்புறத்தில் உள்ளனர். அவர்களுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிப்பது சவாலாக உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், கணினியும் இல்லை; இணையதள வசதியும் இல்லை.

நீட் விண்ணப்ப வழிமுறைகள், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் உள்ளதால், அதில் உ

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...