கோடை வெயில் தாக்கம் காரணமாக 11 மணிக்கு மேல் பள்ளிகள்
திறந்திருக்க கூடாது என்று ஓடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை காலங்களில் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓடிசா மாநில அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளின் வேலை நேரம் காலை 6.30 மணி முதல் 10.30 மணிக்கு முடிவடைய வேண்டும், மதிய உணவு இடைவேளை காலை 10 மணிக்கு வழங்கப்பட வேண்டும். 11 மணிக்கு மேல் பள்ளிகள் திறந்திருக்க கூடாது. வெயில் காலங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் முதல் உதவி ஆகிய வசதிகள் இருக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது குடை மற்றும் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.