வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம்
ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை ஜீரணிக்க முடியவில்லை. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மறுதேர்வு தொடர்பாக மாணவர்கள் தரப்பில் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்திற்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ தெரிவித்து உள்ளது.
10-ம் வகுப்பு கணிதம் பாடத்திற்கான வினாத்தாள் டெல்லி மற்றும் அரியானாவில் மட்டுமே வெளியாகி உள்ளது. மறுதேர்வு தொடர்பாக 15 நாட்களில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும். எனவே மறுதேர்வு நடைபெற்றால் இரு மாநிலங்களில் மட்டுமே நடைபெறும். மறுதேர்வு நடைபெற்றால் ஜூலையில் நடைபெறும் என சிபிஎஸ்இ தெரிவித்து உள்ளது.