செப்.22ல் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?: உண்மையை உடைத்த சசிகலா!


சென்னை: செப்.22-ம் தேதி இரவு 9.30 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா தவறி விழுந்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாத்ரூமில் தவறிவிழுந்த ஜெயலலிதா தம்மிடம் உதவி கேட்டதாகவும் உடனடியாக டாக்டர் சிவகுமார் உட்பட 2 பேர் கொண்ட மருத்துவர்கள் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்ததாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.,வின் பாதுகாவலர் 2 பேர் மற்றும் கார் ஓட்டுநர் உடனடியாக அழைக்கப்பட்டதாகவும் அப்பல்லோவுக்கு தகவல் கூறியபின் ஆம்புலன்ஸ் வந்ததாக சசிகலா தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஜெ.,வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் ஆம்புலன்ஸில் ஏற்றிய பின் ஜெ., சுயநினைவுக்கு திரும்பியதாக பிரமாணப்பத்திரத்தில் சசிகலா குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைக்கு செல்ல ஜெ., மறுத்ததாகவும் வீட்டில் தவறி விழுந்ததற்கு 2 நாட்களுக்கு முன் ஜெ.வுக்கு 2 முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...