காக்னிசண்ட் நிறுவனம் 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 8,000 பேரைப்
பணிநீக்கம் செய்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ள அதிகபட்ச பணிநீக்கம் இதுவாகும். அதேநேரம் வட அமெரிக்காவில் அதிக வேலைவாய்ப்புகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சேவைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான காக்னிசண்ட் இந்தியாவிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள ஆண்டறிக்கையில், ‘2017ஆம் ஆண்டின் முடிவில் எங்களது நிறுவனக் கிளைகளில் உலகம் முழுவதும் சுமார் 2,60,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், இந்தியாவில் 1,80,000 பேரும், வட அமெரிக்காவில் 50,400 பேரும், ஐரோப்பாவில் 13,800 பேரும், இதர நாடுகளில் 1,95,800 பேரும் பணியாற்றுகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் (2,60,200) இந்தியாவில் மட்டும் 1.88 லட்சம் பேர் பணியாற்றினர். இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 8,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், வட அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டில் 47,500 பேர் பணியாற்றிய நிலையில், 2017ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50,400 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, ஐரோப்பாவில் 23,00 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே தானியங்கிமயம் மற்றும் விசா போன்ற பிரச்சினைகளால் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.