பெண் நடத்துநர்களுக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு!


போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பெண் நடத்துநர்களுக்கு 9 மாத பேறுகால விடுப்பு வழங்க, மகாராஷ்டிர மாநில போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்களில் 4,400 பேர் பெண் ஊழியர்கள்.

பெண் ஊழியர்களுக்கு 12 வாரமாக இருந்த பேறுகால விடுப்பை, கடந்த ஆண்டிலிருந்து 26 வாரமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பெண் நடத்துநர்களுக்கு சம்பளத்துடன் 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்தப் பேறுகால விடுப்பை 9 மாதமாக அதிகரிக்க மராட்டிய மாநில போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

"கர்ப்ப காலத்தில் பெண்கள் பணியில் இருந்தபோது, 6 பெண் நடத்துநர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. இந்தச் சோக சம்பவங்களையடுத்து, பெண் நடத்துநர்களின் பேறுகால விடுப்பை 9 மாதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். பெண்களின் நலன் கருதியும், குழந்தையின் நலம் கருதியும் இந்த முடிவை எடுத்துள்ளோம். மேலும் கர்ப்பிணி நடத்துநர்களுக்கு அலுவலகப் பணி வழங்கவும் முடிவு செய்துள்ளோம்" என்று மாநில போக்குவரத்துக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி அப்ஜித் போஸ்லே தெரிவித்துள்ளார்.

மராட்டிய போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவிற்கு பெண் நடத்துநர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...