ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல்

ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை
அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
 
2017 ஆக., 31 ன் படி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்களாக 3,170 உள்ளன. சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் 2,533 பணியிடங்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டன. இந்த உபரி பணியிடங்களில் 1,992 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 541 பணியிடங்கள் காலியாக உள்ளன.

1,992 உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் வேறு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்றப்படுவர்.இதனால் 3,170 காலிப்பணியிடங்கள், 1,178 ஆக குறையும்.

மேலும் சில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 840 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் 2,018 காலியிடங்களே ஏற்படும்.

இந்த ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடக்க உள்ளது. தொடக்கக் கல்வித்துறையில் ஒன்றிய சீனியாரிட்டியே கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 'சிங்கிள் டிஜிட்' காலியிடங்களே உள்ளதால் ஆசிரியர்கள் இடமாறுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...