சென்னை: முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானி
உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சாய்க்குமார், முதல்வர் முதன்மை செயலாளர்-1 ஆகவும், எல்காட் மேலாண்மை இயக்குநர் சுடலை கண்ணன், ஐ.ஏ.எஸ் திட்ட இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர் சந்திரமோகன், தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.எஸ்.ஏ திட்ட இயக்குநர் நந்தகுமார், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.டி., முதன்மை செயலாளர் ராமசந்திரன் அண்ணா கல்வி மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கும், அரசின் முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், டான்ஜெட்கோ முதன்மை செயலாளராகவும், குடிசை மாற்று வாரிய முதன்மை செயலாளராக ஷாம்பு கலிக்கோர் வீட்டு வசதி வாரிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசு பணிக்கு வந்த சோமநாதன் வணிக வரித்துறை செயலாளராகவும், சிம்.எம்.டி.ஏ., செயலாளராக இருந்த விஜயராஜ்குமார் ஊனமுற்றோர் நலத்துறை செயலாளராகவும், தொழிற்நுட்ப கல்வி கமிஷ்னராக இருந்த பழனிசாமி, கூட்டுறவு துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் நலத்துறை செயலார் பாலசந்திரன், வணிகவரித்துறை முதன்மை செயலாளராகவும், தமிழ்நாடு ஹவுசிங் போர்டு துணை செயலாளர் டாக்டர். ஜெயசந்திர பானுரெட்டி, சுற்றுசூழல் மற்றும் வனத்துறை துணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக இருந்த அருண் சுந்தர் தயாளன், தமிழக சர்க்கரை ஆலை கூடுதல் இயக்குநராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்கான இணை இயக்குநர் கோவிந்தராஜ் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவுத்துறை பதிவாளர் குணசேகரன், கால்நடை பாதுகாப்பு இயக்குநராகவும், ராமநாதபுரம் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநராக இருந்த சமீரான் மீன்வளத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.