கல்வி சீர் கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியை மாற்றிய ஊர்மக்கள்!!!


பெரம்பலூர்: பெரம்பலூர்  மாவட்டத்தில் உள்ள சில்லக்குடி அரசு பள்ளி ஒன்றிற்கு, கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்விச் சீராக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்லக்குடி அரசு பள்ளி 2012ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட இந்த பள்ளிக்கு தனியாக கட்டிடம் இல்லாததால் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்த அதே பள்ளியில் உயர்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வந்தது. கூடுதல் கட்டிட வசதி இல்லாமல் இட நெருக்கடியில் தவித்ததால் தனியாக பள்ளி கட்டிடம் கட்டி தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று ஊர்மக்களே 5 ஏக்கர் நிலம் வழங்கியதை அடுத்து 12 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. பழைய இடத்தில் இருந்து 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்கள் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டனர்.

இந்த நிகழ்வினை ஊர்மக்கள் ஒன்றுகூடி விழா எடுத்தனர். பள்ளிக்கு தேவையான பீரோல், டேபில், இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களை மேள தாள முழங்க ஊரைச்சுற்றி வந்து கல்விச் சீராக வழங்கினர். தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து பள்ளிகளிளும் எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்று கிராம மக்களே முன்வந்து கல்விச் சீர் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக பள்ளி தலைமையாசிரியர் சங்கீதா கூறியுள்ளார். பெரம்பலூரில் கொத்தவாசல் மற்றும் கத்தாலைமேடு அரசு பள்ளிகள் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் பல்வேறு வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. அடிப்படை வசதியே இல்லதா கிராமங்களில் கல்விச் சீர் நிகழ்வுகளால் 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்ற ஒளவையாரின் வாக்கு மெய்யாகிறது என்றால் மிகையல்ல.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...