தமிழகம் பஸ்கள் நிற்காததால் கலெக்டரை சிறைப்பிடித்து மாணவர்கள் போராட்டம் : போடி அருகே பரபரப்பு- DINAKARAN

அரசு பஸ்கள் நிறுத்தப்படாததை கண்டித்து தேனி கலெக்டர் வந்த காரை சிறைப்பிடித்து, மாணவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் போடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி அருகே
அணைக்கரைப்பட்டி, பொட்டல்களம், துரைராஜபுரம் காலனி, போ.மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படுவதில்லை. இதனால் இந்த ஊர்களை சேர்ந்த மாணவர்கள், போடியில் படிக்கும் பள்ளிகளுக்கு வர 3 முதல் 4 கி.மீ தூரம் புத்தகப்பைகளுடன் நடந்து செல்லும் அவலநிலை உள்ளது. போடி அருகே மீ.விலக்கு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை.

எனவே, நேற்று காலை குரங்கணிக்கு சென்று விட்டு திரும்பிய கலெக்டர் பல்லவி பல்தேவ் வந்த காரை 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பொதுமக்களுடன் சேர்ந்து வழிமறித்தனர். அவர் அங்கிருந்து சென்று விடாமல் சிறைப்பிடித்தனர். இதனால் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசிய கலெக்டர், தொடர்ந்து அப்பகுதிக்கு பஸ் இயக்குவதாக கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...