கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்
அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் சரகத்தில் உள்ள, 572 பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, மார்ச், 12, 19, 26, ஏப்ரல், 2 ஆகிய தேதிகளில், தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதற்காக, வாக்காளர்பட்டியல் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்களாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே, பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வுப் பணிக்கு சென்றுவிட்ட நிலையில், இந்த தேர்தல் பணி, கூடுதல் சுமையை ஏற்படுத்திஉள்ளது.
இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:கூட்டுறவு சங்க தேர்தல், ஒரு நாளில் நடந்தாலும், அதற்கான பணிகள், பயிற்சி என, பலநாட்களை செலவிட வேண்டியிருக்கும்.ஏற்கனவே, பெரும்பாலான ஆசிரியர்கள்,தேர்வுப் பணிக்கு சென்று விட்டனர்.பள்ளியில் ஓரிருஆசிரியர்களை வைத்து சமாளிக்கும் சூழலில், தேர்தல் பணிக்கும்ஆசிரியர்களை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு நேரத்தில், இத்தேர்தல் பணியைத் தவிர்த்திருக்கலாம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.