பெற்றோரின் விவாகரத்து பிரச்சினையை தீர்த்து வைத்த உச்ச நீதிமன்றத்துக்கு 10 வயது சிறுவன் நன்றி கடிதம் எழுதியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
1997ஆம் ஆண்டு மே மாதத்தில் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில பிரச்சினைகளால் இருவரும் 2011ஆம் ஆண்டில் இருந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். பின்னர் விவாகரத்துக்காக உச்ச நீதிமன்றத்தை நாடிய இவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக சிவில் மற்றும் குற்றவியல் மனுவைத் தாக்கல் செய்தனர். அதன்படி 23 வழக்குகள் தொடரப்பட்டன,
இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான குரியன் ஜோசப் மற்றும் மோகன் இருவரும் ஏழு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த விவாகரத்து வழக்கை முடித்து வைத்தனர். இருவருக்கும் விவாகரத்து வழங்கித் தீர்ப்பளித்தனர்.
தற்போது இந்தத் தம்பதியினரின் 10 வயது மகன் நீண்ட கால பிரச்சினையை தீர்த்து வைத்ததாகக் கூறி உச்ச நீதிமன்றத்துக்கு நன்றிக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கடவுள் எப்போதும் உங்களுக்காக ஏதேனும் ஒன்றை வைத்திருப்பார். எல்லா பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும். எல்லா நிழலுக்கும் ஒரு வெளிச்சம் இருக்கும். எல்லாத் துயருக்கும் ஒரு தீர்வு இருக்கும். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு திட்டம் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.