பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்

ஐதராபாத்: தெலுங்கானாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 2018 - 19 கல்வியாண்டு
முதல், தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா, அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.

மசோதா தாக்கல் : தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. தெலுங்கு மொழியை வளர்க்கும் நோக்கத்தில், இங்குள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 1 - 10ம் வகுப்பு வரை, தெலுங்கு மொழியை கட்டாயப் பாடமாக்க திட்டமிடப்பட்டது. தெலுங்கானா துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான, கடியம் ஸ்ரீஹரி, இந்த மசோதாவை, நேற்று முன்தினம், சட்டசபையில் தாக்கல் செய்தார்.
ஒருமித்த ஆதரவு : அனைத்துக் கட்சினரின் ஆதரவுடன், மசோதா, ஒரு மனதாக நிறைவேறியது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் இருந்து, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், தெலுங்கு, கட்டாயப் பாடமாக்கப்படுகிறது. தெலுங்கு மொழி தெரியாதவர்களின் நலன் கருதி, சி.பி.எஸ்.இ., உட்பட, இதர பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில், இப்போதைக்கு, 1 - 6ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தெலுங்கு பாடம் கட்டாயமாக்கப்படுகிறது.இந்த முடிவுக்கு, அனைத்து எதிர்கட்சிகளும், ஆதரவு தெரிவித்து உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...