கல்லூரி மாணவி அஷ்வினியின் கொலைக்கான பின்னணி..!


சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்தவர் ஏற்கனவே அவருக்கு பலமுறை தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம். படித்து வரும் மாணவி அஷ்வினி. மாணவி இன்று கல்லூரி முடிந்து வந்தபோது கல்லூரி வாசலில் அஷ்வினியை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்தியிருக்கிறார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவியை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவி அஷ்வினியை கொலை செய்தவர் இளைஞர் அழகேசன் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அஷ்வினிக்கு அழகேசன் பலமுறை காதல் செய்யுமாறு தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அழகேசன் மீது அஷ்வினி ஏற்கனவே மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் அழகேசன் கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, அழகேசன் தொல்லையிலிருந்து தப்பிக்க அஷ்வினி ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வந்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அஷ்வினி மீது ஆத்திரத்தில் இருந்த அழகேசன் அவரை கல்லூரி வாயிலில் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...