அதிகரிக்கும் ஐடி வேலைவாய்ப்புகள்!!!


ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று விஸ்டம் ஜாப்ஸ் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

இதுகுறித்து விஸ்டம் ஜாப்ஸ் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'பணமதிப்பழிப்பு நிகழ்வின் தாக்கங்கள், ஹெச்.1பி விசா கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், ஜிஎஸ்டி நடைமுறை போன்ற காரணங்களால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மூலமாகவும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

பொறியியல், உள்கட்டமைப்பு, சுகாதார நலன், சில்லறை வர்த்தகம், ஆட்டோமொபைல் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இதில் ஐடி துறையில்தான் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் அதிகளவில் இருக்கும். அதேபோல ஸ்டார்ட் அப் துறையிலும் தொழில்நுட்பம் மற்றும் ஐடி சார்ந்த பணிகள் அதிகளவில் உருவாகும். திறன் சார்ந்த அடிப்படையில் கார்பரேட் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு நிர்ணயங்கள் இருக்கும். திறமை அடிப்படையில் மட்டும்தான் இந்நிறுவனங்கள் ஊழியர்களை எதிர்பார்க்கின்றன.' 140 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 துறைகளில் 350 பேர் வரை தேவைப்படுகின்றனர் எனவும், தகவல் தொழில்நுட்பம், சில்லறை வர்த்தகம், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள், சுகாதாரத்துறை, ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...