பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து!!!

திருநெல்வேலியில் பள்ளி வகுப்பறையில் இரு
மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாணவனுக்குக் கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு மீனவன்குளத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது மகன் கண்ணன்(14), களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். அதே வகுப்பில் களக்காடு மேலபத்தையைச் சேர்ந்த நியூட்டன் என்பவரது மகன் சேன்ஸ்சியோசும் படித்துவருகிறார்.
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று தெரிகிறது. சமீபத்தில் க்ளாஸ் லீடராக இருக்கும் கண்ணன், சேன்ஸ்சியோஸ் ஒழுக்கமற்று நடந்துகொள்வதாக வகுப்பு ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.
இன்று காலை 9 மணியளவில் வழக்கம்போல பள்ளி தொடங்கியதும் மாணவர்கள் வருகை இருந்தது. அப்போது இவர்கள் இருவரும் முன்பகை காரணமாக மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் சேன்ஸ்சியோஸ் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனைக் குத்தியுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகத்தினர், பலத்த ரத்த காயங்கள் ஏற்பட்ட கண்ணனை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்துவந்த களக்காடு போலீசார், தப்பியோடிய மாணவரைத் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாகக் கல்லூரி மாணவர்கள் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு மோதல்களில் ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது பள்ளி மாணவர்களும் கத்தி கலாச்சாரத்தைப் பின்பற்றுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் மாணவர்கள் இதுபோன்று நடந்துகொள்ளாமல் இருக்கப் பள்ளிகளில் தீவிர கண்காணிப்பு தேவை என்று கோரிக்கை எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...